கிராம வைத்தியசாலை சிறந்த சுகாதார சேவையை வழங்க தகவல் அறிவதற்கான சட்டம் உதவியாக அமைந்தது
இலங்கையில் இலவச மருத்துவ சேவைகள்
வழங்கப்பட்டு வந்தாலும் எல்லா வைத்தியசாலைகளிலும்
சமமான அளவில் இந்த சேவை வழங்கப்படுவதில்லை. அதிலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டதாக
இருக்கின்றது. கடுகஸ்தொட்டை – அளுத்கம கிராமப்புற வைத்தியசாலையும் அத்தகைய ஒரு இடமாகும். இந்த வைத்தியசாலைக்கு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றபோது அவர்களுக்கு
சேவை வழங்க போதுமான பயிற்சி பெற்ற தாதிமார் இல்லாதிருப்தோடு சிற்றூழியர்களாலே சேவைகள்
வழங்கப்பட்டு வருகின்ற நிலை இருந்து வருகின்றது.
பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து நடத்திய தகவல்
அறிவதற்கான பயற்சி செயலமர்வில் பங்குபற்றி மாணவர் குழுவொன்று தகவல் அறிவதற்கான சட்டத்தை
பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அந்த சட்டத்தை குறித்த வைத்தியசாலையின் சேவைகளை திறம்பட இயங்கச் செய்வதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்
என்பதையும் அறிந்து கொண்டனர்.
இந்த வைத்தியசாலையில் ஏன் தாதிமார்
இல்லை என்று கேள்வி எழுப்பும் வகையில் தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தை சுகாதார அமைச்சுக்கு
அனுப்பி வைத்தனர்.
அந்த விண்ணப்பத்திற்கு சில வாரங்களில்
பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த வைத்தியசாலையில் தாதிமாருக்கான பற்றாக்குறை
இருப்பது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பயிற்சி
பெற்ற தாதிமார் கிராமப்புற வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுவதில்லை என்றும் அதற்கு பதிலாக
பொதுச் சுகாதார அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் சில வாரங்களில் சுகாதார
சேவையில் பயிற்சி பெற்ற தாதிமார் இந்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டனர். பின்னடைவில்
இருந்த சுகாதார மருத்துவ சேவையை சரியான முறையில் வழங்க முடிந்தது. இது கிராம மக்களுக்கு
நிவாரணமாக அமைந்தது.
தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கான
மருத்துவ சேவையை பிரகாசமுடையதாக மாற்றுவதற்கு பயனுடையதாக அமைந்தது என்று கிராம மக்கள்
திருப்தி தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் மேலும் ஒரு கடிதம்
எழுதி அதில் கையொப்பம் இட்டு இந்த வைத்தியசாலைக்கு மேலும் தேவைப்படும் மருத்துவ சுகாதார
வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் ஒன்றையும்
அனுப்பிவைத்தனர். அத்துடன் இக் கிராம மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நிவர்த்தி
செய்துகொள்வதற்காக தகவல் சட்டத்தை பயன்படுத்தவது தொடர்பாக கூடி ஆலோசனை செய்வதாக பயிற்சியில்
பங்குபற்றிய இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும்
வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில்
பங்கு பற்றிய மாணவர்கவர்களால் சமர்ப்பிக்கப்பட்