logo

எம்மைப்பற்றி

நல்லாட்சி மற்றும் கருத்து சுதந்திரத்தை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) பரிந்துரைப்பதோடு இலங்கையின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்றான தகவலறியும் உரிமைச் சட்டத்தினை (RTI) ஊக்குவிப்பதில் தீவிரமான முகவராகவும் செயற்படுகின்றது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு பிரஜையையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி திட்டங்களை SLPI நடாத்துகின்றது.

சேஞ்ச்மேக்கர் பொது மக்களின் சிறந்த நலனுக்காக தகவல் அறியும் உரிமையை மேம்படுத்துவதற்காக ஒரு ஊடாடும் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தகவல் அறியும் பயனர்களின் வெற்றிக் கதைகள் மற்றும் அனுபவங்களைத் தொகுக்கிறது, இதனால் ஒவ்வொரு பிரஜையும் இலங்கையில் நல்லாட்சியை அடைவதற்கு அவர்களின் தாழ்மையான பங்களிப்பில் “மாற்று முகவராக” மாற முடியும்.

பொறுப்புத் துறப்பு

பயனர்களால் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் உள்ளடக்க உருவாக்குனரின் முன் அனுமதியின்றி SLPI ஆல் பயன்படுத்தப்படமாட்டாது. இருப்பினும், மொழி, துல்லியம் தொடர்பாக உள்ளடக்கத்தைத் திருத்துவதற்கான உரிமையை SLPI கொண்டுள்ளது மற்றும் வெளியிடப்பட்ட வெளியிட்டின் மீதும் உரிமைகளைக் கொண்டுள்ளது.

//