logo

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

பொதுவான கேள்விகள்

1. தகவலறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன?

தகவலறியும் உரிமைச் சட்டம் ஒரு அடிப்படை உரிமையாகும். இது அரச திணைக்களங்களிடமிருந்தும் அரச அதிகாரசபைகளிடமிருந்தும் நாட்டின் பிரஜைகள் தகவல்களை பெற உதவுகின்றது.

2. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “தகவல்” என்றால் என்ன?

சட்டத்தின் படி “தகவல்” என்பது பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல், கருத்துக்கள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், கட்டளைகள், பதிவேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், வீடியோக்கள், வரைபுகள், வரைபடங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிநாடாக்கள், கணணி பதிவுகள், ஆவண மாதிரிகள், மாதிரிகள் உள்ளிட்ட எந்தவொரு வடிவத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு பொருளும் வடிவம் அல்லது தன்மை மற்றும் எந்த நகலையும் உள்ளடக்கியது.

3. தகவலறியும் சட்டம் ஊடாக எந்த மாதிரியான கேள்விகளை கேட்க முடியும்?

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 43 இல் விளக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான எந்தவொரு கேள்வியும்.

4. தகவலறியும் அதிகாரி என்றால் யார்?

23 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவ் உத்தியோகத்தர் நிறுவனங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பதிலளிப்பதற்காக நியமிக்கப்பட்டவராவார்.

5. நியமிக்கப்பட்ட அதிகாரி யார்?

நியமிக்கப்பட்ட அதிகாரி என்பது, ஒரு அரச திணைக்களத்தில் தகவல் அதிகாரி தகவல்களை வழங்க மறுத்தால் அல்லது தவறினால் நீங்கள் இவரிடம் மேன்முறையீடு செய்யலாம். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் இவர்கள் நியமிக்கப்படுவர்.

6. பொது அதிகார சபை என்றால் என்ன?

  1. அமைச்சு
  2. any body or office created or established by or under the Constitution, any written law, other than the Companies Act No. 7 of 2007, except to the extent specified in paragraph (e), or a statute of a Provincial Council;
  3. அரச திணைக்களம்
  4. அரச கூட்டுத்தாபனம்
  5. 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம், இதில் அரச அல்லது ஒரு பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது அரசு அல்லது பொதுக் கூட்டுத்தாபனம் இணைந்து இருபத்தைந்து வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை கொண்டிருத்தல் அல்லது கட்டுப்படுத்துதல்: தகவலறியும் உரிமைச் சட்டம், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கம். 12 ஆம் மாதம் 31 ஆம் திகதி.
  6. a local authority;
  7. ஒரு ஒப்பந்தம், கூட்டாண்மை, ஒரு ஒப்பந்தம் அல்லது அரசு அல்லது அதன் முகவர்களிடமிருந்து அல்லது ஒரு சட்டரீதியான அல்லது பொது செயல்பாடு அல்லது சேவையை மேற்கொண்டு வரும் ஒரு தனியார் நிறுவனம் அல்லது அமைப்பு. நடவடிக்கைகளின் அளவிற்கு மட்டுமே அந்த சட்ட ரீதியான அல்லது பொது செயல்பாடு மட்டுப்படுத்தப்பட்டிருக்கம்.
  8. மாகாண சபையினால் நிறுவப்பட்ட திணைக்களம் அல்லது அதிகாரசபை அல்லது நிறுவனம்
  9. அரசு அல்லது திணைக்களம் அல்லது ஒரு மாகாண சபை அல்லது ஒரு வெளிநாட்டு அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பால் நிறுவப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், கோரப்பட்ட தகவல்கள் சேவையுடன் தொடர்புடையது. மக்களுக்கு சேவையினை வழங்குகின்றது.
  10. எந்தவொரு எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அல்லது உரிமம் பெற்ற அல்லது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியளிக்கப்பட்ட, அரசு அல்லது பொது நிறுவனம் அல்லது மாகாண சபையின் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டபூர்வமான அமைப்பு உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள்.
  11. தொழில் அல்லது தொழிற்பயிற்சியை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள், அல்லது 32 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் எழுதப்பட்ட சட்டம் அல்லது முழுமையாகவோ பகுதியளவிலோ அரசினால் அல்லது கூட்டுத்தாபனத்தினால் நிதியளிக்கப்பட்டது அல்லது மாகாண சபையின் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டபூர்வமான அமைப்பும்.
  12. நீதி நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட மற்றும் நிறுவப்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிறுவனங்கள்.

7.மேன்முறையீட்டு செயல்முறை என்றால் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 31 இன் படி மேன்முறையீடு செய்யப்பட வேண்டிய காரணங்களை அறிய மறுப்பு தெரிவிக்கப்பட்டதிலிருந்து அத் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்யலாம்.

8. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வகிபங்கு என்ன?

நியமிக்கப்பட்ட அதிகாரி எடுத்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் அமைப்பு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு.

  1. இது பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை செவிமடுத்து தீர்;மானங்களை வழங்குகின்றது.
  2. வுpசாரணைகளை நடாத்தி ஆணைக்குழுவின் முன் மக்களை நிறுத்துகின்றது.
  3. தேவையேற்பட்டால் ஒரு நபர் தன் வசமுள்ள தகவல்களை வழங்குமாறு கோருகின்றது.
  4. அதிகாரசபை வைத்திருக்கும் எந்தவொரு தகவலையும் அல்லது அதிகாரசபையினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல்களையும் பரிசோதித்து பொது நலன்களைக் கொண்ட தகவல்களை வெளியிடுவதை வழிநடத்துகின்றது.
  5. குறிப்பிட்ட வடிவத்தில் தகவல்களை வழங்குவதற்கு பொது அதிகாரசபைகளிற்கு அறிவுறுத்துகின்றது.
  6. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தகவல் வழங்கப்படாவிட்டால் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணங்களை மீளச் செலுத்த அறிவுறுத்துகின்றது.

தகவலறியும் சட்டத்தினூடாக நாம் கேட்க முடியாத கேள்விகள் என்ன?

எவ்வாறிருப்பினும், தகவலறியும் சட்டம் தகவல்களை வழங்கினாலும் அதற்கு ஒரு எல்லையுண்டு. கோரப்பட்ட தகவல் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடையதாக இருந்தால் தனை வெளிப்படுத்துவது பொது நலனாக அல்ல நன்மையாக அமையாது. அரசின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது அதன் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு தகவலும் மறுக்கப்படும். வேறு எந்த நாடுகளுடனும் இலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பான தகவல்களும் மறுக்கப்படும். சட்டத்தின் 5 ஆவது பிரிவு தகவல்களை வழங்க மறுப்பது தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்குகின்றது.

10.எந்தவொரு பிரஜையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கோர முடியுமா?

ஆம். நாட்டின் பிரஜை என்பவர் பிறப்பு அல்லது பதிவின் மூலம் நாட்டின் குடியுரிமையைப் பெற்றவராவார். ¾ பங்கு இலங்கை பிரஜைகளை உறுப்பினர்களாகக் கொண்ட எந்தவொரு அமைப்பும் தகவலினை கோரலாம்.

11. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அரச அமைப்பினையும் நாம் கேள்வி கேட்கலாமா?

ஆம்

12. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு தனியார் அமைப்பினையும் நாம் கேள்வி கேட்க முடியுமா?

இல்லை

13. குறிப்பிட்ட ஒரு விடயத்திற்கு மட்டும் பல தகவலறியும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியுமா?

ஆம்

14. விண்ணப்பங்களிற்கு கட்டணம் அறவிடப்படுகின்றதா?

இல்லை. கோரப்பட்ட தகவலின் தன்மையின் அடிப்படையில் கட்டணம் பொது அதிகார சபையினால் தீர்மானிக்கப்படலாம். இல்லையெனில் 2004/66 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அட்டவணைக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும். ஏதேனும் கட்டண விபரம் பொது அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுமாயின் அவ் அறவீடு தொடரும்.

15. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் தொடர்பான கேள்விகள் அனுமதிக்கப்படுகின்றனவா?

இல்லை. பாதுகாப்புப் படைகள் தொடர்பான தகவல்கள் அணுகக் கூடிய தகவல்களின் கீழ் அமையாது.

16. தகவல்களை வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளனவா?

இல்லை. அமைப்பு வழங்கும் தயாரிப்பு அல்லது சேவை பொதுநலனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் வரை எந்தவொரு அமைப்பும் தகவல் வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்படவில்லை.

17. தகவல் அறியும் உரிமையில் தகவலிற்காக கோரிக்கை செய்வது எனக்கு எவ்வாறு பயனளிக்கின்றது?

கோரப்பட்ட அல்லது பெறப்பட்ட தகவல்கள் தேசத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை பூரணப்படுத்துவதில் விண்ணப்பதாரரின் சமூகத்திற்கு உதவும்.

18. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த அரச நிறுவனங்களிடம் நான் கேள்வி கேட்க முடியும்?

பொதுமக்களிற்கு சேவை வழங்கும் எந்தவொரு அரச நிறுவனமிடமும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க முடியும்.

19. தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்த வயதெல்லை உண்டா?

இல்லை. எந்தவொரு பிரஜையும் வயதெல்லை இன்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தலாம்.

20. நான் கோரும் தகவல் குறித்து எனக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்க வேண்டுமா?

14. விண்ணப்பங்களிற்கு கட்டணம் அறவிடப்படுகின்றதா?

21. முறைப்படி விண்ணப்பத்தை தாக்கல் செய்யாமல் தகவலை கோர முடியுமா?

ஆம். நீங்கள் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை பெற முடியும்.

22. தகவலை கோருவதற்காக நான் எப்போதும் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டுமா?

இல்லை. வினா 21 இல் விபரிக்கப்பட்டதை போன்றது.

23. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 39 இன் படி (இணைப்பை சேர்க்கவும்) குற்றம் சாட்டாப்பட்டவரிற்கு அபராதம் விதிக்கப்படலாம். ரூபா 50,000 இற்கும் மேற்படாத அபராதம் அல்லது 2 வருடங்களிற்கு மேற்படாத சிறைத் தண்டனை. அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கப்படலாம்.

வேண்டுமென்றே தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்குதல், தகவல்களை அழித்தல், செல்லுபடியற்றதாக்குதல், மாற்றியமைத்தல் அல்லது மறைத்தல், கோரப்படும் போது ஆணைக்குழு முன் ஆஜராக மறுத்தல் அல்லது ஆஜராகமல் இருத்தல், ஆணைக்குழுவின் முடிவுக்கு இணங்க மறுத்தல் அல்லது நிராகரித்தல், ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்தாது இருத்தல்.

நடைமுறையுடன் தொடர்புடைய வினாக்கள்

1. தகவலறியும் கோரிக்கைக்கு தகவல் அதிகாரி பதிலளிக்காமல் இருக்க முடியுமா?

இல்லை. கோரப்பட்ட தகவல்களை வழங்க அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 23 ஆவது பிரிவின் கீழ் (இணைப்பை சேர்க்கவும்) சட்டத்திற்கு உட்பட்டவர்.

2. தகவல் மறுக்கப்பட்டால் அதன் பின்னர் என்ன செய்யலாம்?

கோரிக்கை மறுக்கப்பட்ட திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யுங்கள். தகவல்களிற்காக சட்டப் பிரிவு 31 , 32 , 34 இனை படிக்கவும் (இணைப்பை இணைக்கவும்).

3. எழுத்திலான பதிலினை வழங்காமல் தகவல் உத்தியோகத்தர் ஒருவர் என்னை சந்திக்க வருமாறு கோரினால் என்ன செய்ய வேண்டும்?

தகவல் உத்தியோகத்தர் அவ்வாறு செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆகவே நீங்கள் மேன்முறையீடு செய்யலாம்.

4. ஒரு விண்ணப்பத்தினை நடைமுறை செய்ய எவ்வளவு காலம் செல்லும்?

தகவலினை உடனடியாக வழங்க முடியும் எனில் தகவல் உத்தியோகத்தரால் செய்ய முடியும். தகவல் கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளல் அல்லது மறுத்தல் தகவல் உத்தியோகத்தரினால் 14 வேலை நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோரப்பட்ட தகவல் பிரஜையின் சுதந்திரம் பற்றியதானால் கோரிக்கை விடப்பட்டு 48 மணித்தியாலங்களிற்குள் வழங்கப்பட வேண்டும். மேலதிக தகவல்களிற்கு சட்டத்தின் 25 ஆம் பிரிவினை படிக்கவும். (இணைப்பினை இணைக்கவும்).

5. விண்ணப்பங்கள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டுமா? அல்லது இணையத்தினூடான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

இணையத்தினூடான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.

6. தகவலறியும் கோரிக்கைக்கான முழுமையான நடைமுறை என்ன?

7. விண்ணப்ப செயல்முறை நடைமுறையினை எவ்வாறு கண்காணிக்க முடியும்?

தகவலை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள வழங்கப்பட்ட பற்றுச்சீட்டினை பயன்படுத்தவும். பதில் கிடைக்கவில்லையெனில் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்யவும்.

8. கிடைக்கப்பெற்ற பதில் திருப்தியடையவில்லையெனில் என்ன செய்ய முடியும்?

நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் முறையிடவும்

9. எந்த வடிவத்தில் தகவலை பெற முடியும்? உதாரணம்:- கடிதங்கள், புத்தகங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் போன்றன.

குறிப்புகள், சான்றுகள் ஆவணங்கள் அல்லது பதிவுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், சான்றளிக்கப்பட்ட மாதிரிகள், அச்சிடப்பட்ட ஆவணங்கள் வடிவில் பெறலாம். கணணியில் அல்லது வேறு எந்த சாதனத்திலும் தகவல்களை சேமித்து வைக்கக் கூடிய இறுவெட்டுஃடிவிடிஃஅநனயை ளவழசயபநஃஒலி,ஒளி நாடாக்கள் அவ்வது வேறு எந்த மின்னணு முறையிலும் பெறலாம்.

10. விண்ணப்பப் படிவத்தை எங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்?

www.rtisrilanka.lk தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு, அரசாங்க தகவல் திணைக்களம் அல்லது நீங்களே ஒன்றை உருவாக்கலாம்.

11. கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப முடியுமா?

ஆம் முடியும். ஆனால் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது அதற்கான பற்றுச்சீட்டினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

12. நான் விரும்பும் மொழியில் தகவல்களை பெற முடியுமா?

ஆம். தேசிய மொழிக் கொள்கையின் படி மூன்று மொழிகளிலும் சேவை வழங்கப்படும்.

13. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மேன்முறையீடு செய்யாவிட்டால் என்ன செய்வது?

உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

14. விண்ணப்பங்கள் யாரிற்கு முகவரியிடப்பட வேண்டும்?

எப்போதும் தகவல் உத்தியோகத்தரிற்கே விண்ணப்பியுங்கள். உதாரணம்:- தகவல் உத்தியோகத்தர், (பொது அதிகாரசபையின் பெயர் / அரச நிறுவனத்தின் பெயர்) (நிறுவனத்தின் முகவரி)

15. நான் எந்த தகவலை இலவசமாக பெற முடியும்?

அச்சிடப்பட்ட அல்லது நகலிடப்பட்ட ஆவணத்தின் முதல் நான்கு பக்கங்களையும் இலவசமாக பெற முடியும். சட்டத்தின் பிரிவு 25 (4) (இணைப்பை சேர்க்கவும்) படி கொடுப்பனவுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் காணப்படுகின்றன.

16. தகவலறியும் சட்டத்தின் கீழ் நான் பெறும் எந்தத் தகவலும் தவறானதாக இருக்குமா?

39 (1) (ய) சட்டத்தின்(இணைப்பை சேர்க்கவும்) கீழ் தவறாக தகவலை வழங்குதல் குற்றமாகும். தவறான தகவல் வழங்கப்பட்டால் நீங்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம். விண்ணப்பிக்கும் போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கோரலாம்.

மேன்முறையீடுகளின் போதான வினாக்கள்

1. மேன்முறையீடு செயல்முறை என்ன?
2. அலுவலர் தகவல்களை வழங்கத் தவறினால்; என்ன செய்ய வேண்டும்?

நியமிக்கப்பட்ட அலுவலகரிற்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம். சட்டத்தின் 32 ஆம் பிரிவை பார்க்கவும்.

3. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மேன்முறையீடு செய்யப்படாவிட்டால் என்ன செய்வது?

உங்கள் மேன்முறையீடு நிராகரிக்கப்படும். மேலும் தொடர விரும்பினால் மீண்டும் விண்ணப்பத்தினை தாக்கல் செய்ய வேண்டும்.

4. தகவலறியும் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யலாமா?

ஆம். அடிப்படை உரிமைகளை மீறியதற்காக உயர் நீதிமன்றம் செல்லாம்.

தனியுரிமை பற்றிய கேள்விகள்

1. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பின்னர் ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுமா?

எந்தவொரு அதிகாரசபையும் அல்லது தனிநபரும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் உரிமையை கேள்வி கேட்க முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்தினை மேற்கொண்ட நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள்.

2. பெறப்பட்ட தகவலை பிரசுரிக்க முடியுமா?

ஆம். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 36 ஆம் பிரிவை பார்க்கவும்.

3. சில நோக்கங்களிற்காக தகவல்களை சாட்சியாக பயன்படுத்த முடியமா?

ஆம், பெறப்பட்ட தகவலை சாட்சியாக பயன்படுத்த முடியும்.

4. தகவலறியும் உரிமைக் கோரலினை தாக்கல் செய்யும் போது எனது தனிப்பட்ட விபரங்கள் இரகசியமாக பேணப்படுமா?

ஆம். இது போன்ற தகவல்களை இரகசியமானதாக பேண வேண்டியது தகவல் அலுவலரின் கடமையாகும்.

சேஞ்ச்மேக்கர் பற்றிய கேள்விகள்

தளத்தில் ஒரு பேட்ஜை எவ்வாறு பெறுவது?

தளத்தில் செயல் உறுப்பினராக இருப்பதன் மூலம் நீங்கள் பேட்ஜ்களை பெறலாம். நீங்கள் செய்யும் செயல்களின் அடிப்படையில் புள்ளிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும் செயற்பாடுகள் பின்வருமாறு

  • ஒரு கணக்கை உருவாக்குதல் - 1
  • மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும் - 2
  • முதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் (சேமித்து பதிவிறக்குங்கள்) - 4
  • நிர்வாக அனுமதி பெற்ற பின்பு சம்பவக் கற்கை வெளியிடப்படுகிறது - 4
  • சம்பவக் கற்கைக்கான மதிப்பீட்டைப் பெறுகிறது - 1 விகிதத்திற்கு
  • மாதத்தில் பிரபலமான கதைகள் வரை வருகின்றன (5 இல்) - 4
  • மாதத்திற்கான சிறந்த பங்களிப்பாளராக மாறுதல் - 10
  • முறையீடு பற்றிய கதையை வெளியிடத் தேர்வுசெய்கிறது - 1
  • இணைய முகப்புக்கு உறுப்பினர் ஒருவரை குறிப்பிடுதல் - 2
  • இணைய முகப்பிற்கு மூன்று வழக்குகளை வெற்றிகரமாக வெளியிடுதல்- 10
  • தீர்க்கப்பட்ட விண்ணப்பத்தை (பதில்) இணைய முகப்பில் பதிவேற்றுகின்றது - 5
  • சம்பவக் கற்கையாக வெளியிடத் தேர்வுசெய்கிறது - 1
//