அரச தொழில் வாய்ப்புக்களில் ஆட்சேர்ப்பு தொடர்பாக விண்ணப்பித்தவர்களால் கோரப்பட்ட தகவல்
அரச துறைகளில் வேலைவாய்ப்புக்கான
தேவை மிகவும் உயர்வான நிலையில் இருந்து வருகின்றது. அதனால் அரச துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு
ஆட்சேர்ப்பு செய்யும் போது போட்டி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
அரச துறைகளுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்து ஆட்சேர்ப்பு செய்வதற்கு அப்போதைய ஜனாதிபதியாக
இருந்த ஆர். பிரேமதாச ஏற்படுத்திய சிறந்த முறையே போட்டிப் பரீட்சை முறையாகும். இத்துறையில்
நிலவும் ஊழல்களையும் மோசடிகளையும் முறைகேடான நியமனம் வழங்கல், தமக்கு தெரிந்தவர்களுக்கும் நியமனங்கள்
வழங்கும் முறை ஆகிய ஒழுங்கீனங்களை ஒழிப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதாயினும்
தற்போதைய நிலையில் இந்த பரீட்சை முறையிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட
தகவல் அறிவதற்கான சட்டம் இந்த முறையில் புதிய திருப்பத்திற்கு வழி வகுத்து இருக்கின்றது.
அரச துறையில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது முறைகேடுகள்
அல்லது விருப்பத்திற்குரியவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கியதாக சந்தேகங்கள் ஏற்படும்
போது அது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பம் சமர்ப்பித்து உண்மை நிலைமைகளை
கண்டறிய முடியும்.
அண்மையில் கலால் திணைக்களத்தில்
ஒரு பதவிக்காக விண்ணப்பித்த ஒரு பெண் அது தொடர்பான தகவல்களை பெறுவதற்காக தகவல் அறிவதற்கான
சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்.
2014 டிசம்பர் 22 ஆம் திகதி இலங்கை
கலால் திணைக்களத்தில் ஒரு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த
விளம்பரத்தை பார்த்து பதுளை ஹபுவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த வினோலா என்ற பெண் அவரது
விண்ணப்பம் தொடர்பாக விபரம் கோரியுள்ளார். இந்த பதவிக்கான வெற்றிடம் தொடர்பாக அரசாங்க
வர்த்தமாணியிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நிதி அமைச்சு இலக்கம் 41800 இற்கமைவாக நடத்திய
போட்டிப் பரீட்சைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
விண்ணப்பதாரி இலங்கையில் 122 ஆவது இடத்தைப் பெறும்
வகையில் 150 புள்ளிகளைப் பெற்று
பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இவர் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் இலங்கை கலால்
திணைக்களம் 2016 மார்ச் 01 ஆம் திகதி நேர்முகப் பரீட்சைக்கு
அவரை அழைத்திருந்தது. ஆனாலும் அந்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அது தொடர்பான பெறுபேறு
அவருக்கு அறிவிக்கப்படவில்லை.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து நடத்திய தகவல் தொடர்பாடல் மற்றும் (SDGAP) தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய
பயிற்சி செயலமர்வின் போது அவர் தகவல் இச் சட்டம்
பற்றி அறிந்து கொண்டார்.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்
அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் வினோலா இரண்டு விண்ணப்பங்களை கலால் திணைக்களத்தின்
தகவல் அதிகாரிக்கு சமர்ப்பித்ததன் ஊடாக அவரது தொழில் பற்றி வினவப்பட்டது. 2018 நவம்பர் மாதம் அவர்
அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அதற்கு அவருக்கு பதில் அனுப்பப்பட்டது.
இரண்டு கடிதங்களை ஒப்பிட்டு பார்க்கும்
போது அங்கே ஒரு பிரச்சினையை காண முடிந்தது. கலால் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட
போது அந்த கடிதம் நிதி மற்றும் ஊடக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து
கலால் திணைக்களத்தின் ஊடாக விண்ணப்பதாரிக்கு வழங்குவதற்காக தகவல் கோரப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தின் பிரதி விண்ணப்பதாரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இப்போது வினோலாவுக்கு
எந்தவிதமான பதிலும் அனுப்பப்படவில்லை என்பதோடு அவர் அந்த தொழில் தொடர்பான ஆர்வத்தையும்
இழந்துள்ளார்.
அத்துடன் இந்த தொழில் வழங்கலில்
முறைகேடு நடந்திருக்கின்றது என்பதை உணர முடிகின்றது என்பதாக வினோலா கூறுகின்றார். ஆனாலும்
தகவல் அறிவதற்கான சட்டம் இல்லாதிருந்திருக்குமானால் அவர் பல திணைக்களங்களுக்கு சென்று
பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்பது அவரின் கருத்தாகும். ஆனாலும்
தகவல் சட்டத்தின் மூலம் அவரால் நம்பிக்கையுடன் தகவல் கோர முடிந்திருக்கின்றது. அவரைப்போன்ற
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக அவரால் செயற்பட முடியும்
என்று வினோலா கூறுகின்றனார்.
இந்த தகவல் நல்லாட்சி
மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல்
மற்றும் தொடர்பாடல் (SDGAP) தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் முன்வைக்கப்பட்டதாகும்.