தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு
ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018 ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 1471 டெங்கு நோயாளகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு
திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தொவிக்கின்றன.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை
பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது அந்த செயலமர்வில் பங்குபற்றியதான் மூலம்
பெற்றுக் கொள்ளப்பட்ட அறிவைக்கொண்டு 2018 செப்டம்பர் மாதம் சில இளம் பங்குபற்றுனர்களால் மட்டக்களப்பு
மாவட்ட சுகாதார திணைக்களத்திடம் தகவல் அறிவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும்
வகையில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார திணைக்களம் வழங்கிய பதிலில் மாநாகர சபையுடன் இணைந்து
டெங்கு ஒழிப்பு தொடர்பான பொதுமக்கள் அறிவூட்டல், விழிப்புணர்வு
நடவடிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள்,
ஊடக மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள்
என்பவற்றோடு அவர்களது அலுவலகத்தால் கள விஜயங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
திணைக்களத்தின் தகவலுக்கமைவாக பொதுமக்கள்
மத்தியில் அவதானம் குறைவால் மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில்
அவர்களால் அவர்கள் வாழும் சூழல் சுத்தமாக வைக்கப்படுவதில்லை. குப்பைகளை முறையாக அழித்துவிடாததால்
அவற்றின் மூலம் நுளம்பு பெருக்கம் ஏற்படுகின்றது. அதனால் நுளம்பு பெருகுவதை கட்டுப்படுத்துவதற்காக
நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அழித்துவிடுதல்,
வீடுகள்,
கட்டிடங்கள், வர்த்தக காணிகள்
மற்றும் நீர் வடிந்து செல்லக் கூடிய மற்றும் தேங்கி இருக்கும் கால்வாய்களை துப்புறவு
செய்தல் போன்ற நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
திணைக்களம் வழங்கிய தகவல்களுக்கமைய 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர்
மாதம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 05 வீதத்தினர் மாத்திரமே
டெங்கு நோயாளிகள் என்று தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
மக்கள் மத்தியில் டெங்கு நோய் பரவாமல்
தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சூழலை முகாமைத்துவம் செய்தல் பற்றிய
போதுமான அறிவும் விழிப்புணர்வும் இல்லாமையே என்று மட்டக்களப்பு சுகாதார திணைக்களம்
நம்புகின்றது. அதனால் வீடு வீடாக சென்று அறிவூட்டல் செய்யும் மற்றும் பொதுமக்களை டெங்கு
நோய் பற்றி விழிப்பூட்டும் நடவடிக்கைகளை திணைக்களம் ஆரம்பித்திருக்கின்றது.
ஆனாலும் இந்த பிரதேசத்தில் உள்ள சுகாதார
அதிகாரிகளால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை இளைஞர்கள் சிலர் புரிந்து
கொண்டுள்ளனர். தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை
தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் போதுமான விழிப்பை பெற்று அவர்களால் மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். அவ்வாறே தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய
அறிவூட்டலுக்கு குறித்த இளைஞர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை
பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய
ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட அனுபவத்தை பற்றியதாக இந்த கதை அமைகின்றது.