மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்
அதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பின்னர் உயர்கல்விக்காக அரசாங்க பல்கலைக்
கழகங்களுக்கு அனுமதி பெறுவது எவ்வாறு என்பதாகும்.
உயர் கல்வி வசதிகளை எல்லா மாணவர்களுக்கும் வழங்க முடியாத அளவிற்கு
காணப்பட்டு வரும் வசதிகளிலான குறைபாடுகள் உயர்கல்வி வாய்ப்புக்களை பரீட்சைக்கு தோற்றி
சித்தியடையும் எல்லா மாணவர்களையும் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிக்க முடியாதபடி வரையறைகளை
விதிப்பதாக அமைந்திருக்கின்றது. அதனால் பல்கலைக்கழக அனுமதியிலும் மட்டுப்படுத்தல்கள்
செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு அவர்களது கல்வியை
தொடர்வதற்கான நிதி உதவியாக முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலியால் ஆரம்பிக்கப்பட்ட
மஹாபொல புலமைப்பரிசில் நிதி உதவித் திட்டத்தின் மூலம் மாதாந்தம் 5000 ரூபா புலமைப்பரிசில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது.
மஹாபொல புலமைப்பரிசில் திட்ட நிதி உதவி பெறுவதற்காக மாணவர்களை
தெரிவு செய்யும் நடைமுறை தொடர்பாகவும் குறிப்பாக அரசாங்க துறைகளில் தொழில் புரியாத
பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கும் நடைமுறை தொடர்பாகவும் தகவல்
அறிவதற்கான சட்டத்தின் மூலம் மாணவர்கள் குழுவொன்றால் விளக்கம்;
கோரப்பட்டது.
உயர்கல்வி அமைச்சு இந்த தகவல் கோரிய விண்ணப்பத்திற்கு பதிலாக
மஹாபொல புலமைப்பரிசில் வழங்குவதற்காக மாணவர்களை தெரிவு செய்யும் முறை தொடர்பான விளக்கங்களை
வழங்கியது. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மூலம் பெறுகின்ற இஸட் புள்ளியும்
புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்கின்ற மாணவர்களது குடும்ப வருமான மட்டமுமே புலமைப்
பரிசிலுக்கான தகைமையாக கொள்ளப்படுகின்றது என்ற தகவல் தெரிவிக் கப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும்
வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் (SDGAP) அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த
செயலமர்வில் மகாபொல புலமைப்பரிசில் நிதி உதவிக்காக விண்ணப்பித்துள்ள மற்றும் நிதி உதவி
பெறும் வாய்ப்பை இணைந்துள்ள மாணவர்கள் சிலரும் பங்கு பற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான
உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பயன்படுத்தி இந்த புலமைப்பரிசில்
நிதி உதவி வழங்கல் தொடர்பான நடைமுறை பற்றி தகவல் கோரியமை தொடர்பாக வழங்கிய தகவல் இதுவாகும்.