தகவல் அறிவதற்கான சட்டம் களனி பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப் படிப்பின் விண்ணப்பப்படிவத்தை பாதுகாத்தது
இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எழுத்தறிவு வீதத்தில்
உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருந்தாலும் கல்வித்துறையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிக்
கொண்டிருக்கின்றது. வருடாந்தம் முதலாம் வகுப்பிற்கு 300.000 இலட்சம் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர் அவர்களில் குறிப்பிட்ட
ஒரு விகிதமே க.பொ.த. உ.யர்தரத்தில் கல்வி கற்று சித்தியடைந்து போதுமான வெட்டுப் புள்ளியை
பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை பெறுகின்றனர். அதிலும் மிகவும் குறைந்த
எண்ணிக்கையினர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு புலமைப்பரிசில் பெற்று செல்கின்றனர்.
இன்னும் ஒரு பிரிவினர் இலங்கையில் உள்ள கல்விக் கல்லூரிகளில் அனுமதியை பெற்று நுழைகின்ற
அதே நேரம் எஞ்சுகின்றவர்களில் ஒரு குழுவினர் தேசிய பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக
கற்று பட்ட சான்றிதழை பெறுகின்றனர்.
இவ்வாறு வெளிவாரி கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பலதரப்பட்ட
பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமை தகவல் அறிவதற்கான விண்ணப்பப்படிவம் ஒன்றை சமர்ப்பித்த
போது தெரிய வந்திருக்கின்றது.
அத்தகைய ஒரு மாணவராக லசந்த 2015 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைநெறிக்கு பதிவு
செய்யப்பட்டார். 2014 ஆம் அண்டு பதிவு செய்யப்பட்டு முதலாம் வருட பரீட்சைக்கு தோற்ற இருந்த போதும் அதில்
நீண்ட தாமதம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் பட்டம் ஒன்றை பெற்று தொழில் சந்தையில் நுழைய
காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த நிலைமை ஒருவிதமான உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்கின்றது. இதுபோன்ற நிலைமைகள் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகளுக்கு
காரணமாக அமைகின்றன.
இவ்வாறு உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவரான லசந்த தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி அறிந்துகொண்டார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்,
அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும்
தொடர்பாடல் (SDGAP) தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில்
அவரும் பங்குபற்றினார்.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்ட
பின்னர் லசந்த முதல் பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள்
தொடர்பாக களனி பல்கலைக் கழகத்திற்கு உரிய பதில்களை வழங்குமாறு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்பட்டது.
மாணவர் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய விளக்கம்
ஒன்றை குறித்த விண்ணப்பத்திற்கு பதிலாக களனி பல்கலைக் கழகத்தின் தொலைக் கல்வி தொடர்
கற்கைப் பிரிவு வழங்கியது. சமர்ப்பிக்கப்பட்ட
பதில் மாணவர்கள் மத்தியில் அவர்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை
வழங்கும் என்ற ஒரு எதிர்பார்பபை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
தகவல் அறிவதற்கான சட்டம் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை
வெளிக் கொண்டு வந்து தீர்வை நாடச் செய்வதற்கு உதவியதாக லசந்த தெரிவிக்கின்றார். தற்செயலாக
அவர் இந்த செயலமர்வில் பங்குபற்றியதால் இந்த அறிவு கிடைத்ததோடு எதிர்காலத்தில் தகவல்
அறிவதற்கான சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அடையாளம் மாற்றப்பட்டிருக்கின்றது.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும்
தொடர்பாடல் (SDGAP) தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில்
பங்குபற்றிய ஒருவரால் வழங்கப்பட்டதாகும்.