புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்
கம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற
பழைய பஸ் நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம்பாலத்திற்கு
அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் இந்த புதிய கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகும்.
கட்டிட நிர்மாண வேலைகள் ஐந்து
மாதங்களுக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளன. ஆனாலும் இதுவரையில் அந்த பஸ் நிலையம் பொதுமக்கள்
பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. அதனால் அந்த கட்டிடத் தொகுதி தற்போதைய நிலையில்
பல்வேறு விதமான விரும்பத்தகாத செய்பாடுகளுக்காகவும் முறைகேடாகவும் ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது. அதனால் அந்த இடம் முற்றாக சட்டம் ஒழுங்கிற்கு முரணான வேலைகள் நடைபெறும்
பகுதியாக மாறி இருக்கின்றது. அத்துடன் முறையான பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாததால் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும்
இடமாகவும் இந்த புதிய பஸ் நிலைய கட்டிடத் தொகுதி அமைந்துள்ள இடம் பயன்படுத்தப்பட்டு
வருகின்றது.
தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி
சமர்ப;பிக்கப்பட்ட விண்ணப்பம் ஊடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
கட்டிடத் தொகுதி ஏன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை என்ற தகவல் கோரப்பட்டது.
கம்பஹா மாநகர சபை தகவல் கோரியவரை தொடர்பு கொண்டு அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக
நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அது தொடர்பாக மேதிக விசாரணைகளின் பின்னர்
14 நாட்களுக்குள் பதிலளிப்பதாக
விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்பட்டது.
போதுமான சுகாதார மற்றும் கழிவறை
வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பது
தாமதமடைவதாகவும் தற்போது அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருதால் அந்த வேலைகள்
பூர்த்தியடைந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்று பின்னர் பதிலளிக்கப்பட்டது.
இந்த தகவலானது நல்லாட்சி
மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல்
அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இப்பிரதேச பயிலுனரால்
சமர்ப்பிக்கப்பட்டதாகும்.