RTI நடவடிக்கை: தொரகல கிராம மக்கள் நல்ல பாதையை அடைய தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தினர்
கம்பளையில் இருந்து
30 கிலோ மீட்டர் தொலைவிலும் கண்டி நகரத்திலும்
இருந்து 60 கிலோ மீட்டர் தொலைத் தூரத்திலும் மிகவும்
கஷ்டமான பிரதேசத்தில் அமைந்திருப்பதே தொரகல என்ற கிரமமாகும். எவ்வாறாயினும் அழகான கிரமமானாலும்
பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயமே இக்கிராம
மக்களது பிரதான ஜீவனோபாயமாகும். கிராம மக்கள் அவர்களது விவசாய அறுவடைகளை நகரத்திற்கு
கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் வேறு தேவைகளுக்கு நகரத்திற்கு செல்வதற்கும் வசதியான
பாதை இல்லாததால் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுவான எல்லா பிரஜைகளும்
அனுபவிக்கும் வசதிகளில் இருந்து புறந்தள்ளப்பட்ட நிலையிலே இந்த மக்கள் இருந்து வருகின்றனர்.
கிராமத்தில் சில கட்டிடங்களும் பஸ் நிலையமும் இருந்ததோடு பிரதான கிராம மத்தியில் இருந்து 18 கிலோமீட்டர்
தூரத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. கிராமத்திற்கான பாதை மிகவும் மோசமான நிலையில்
பழுதடைந்திருந்ததால் மக்கள் உரிய இடங்களுக்கு செல்வதில் பல சிரமங்களை எதிர் நோக்கினர்.
தகவல் அறிவதற்கான
உரிமை சட்டம் பற்றி அறிந்துகொண்டவுடன் அந்த சட்டத்தை பயன்படுத்தி மத்திய மாகாண நெடுஞ்சாலைகள்
அபிவிருத்தி அதிகார சபையிடம் கிராமத்திற்கான பாதையை திருத்தி அமைப்பது தொடர்பாக தகவல்
கோரினர். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட
விண்ணப்பத்திற்கு தெரிவிக்கப்பட்ட பதிலில் பாதையில் எல்லைகளை குறிப்பதில் பிரச்சினை
இருந்து வருவதால் திருத்தி அமைக்கும் வேலைகளை மேற்கொள்ள முடியாது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பதிலில்
திருப்தி அடையாத கிராம மக்கள் அது தொடர்பான மேலதிக தகவல்களை உயர் அதிகாரிகளிடம் கோரி
மேலும் மனு செய்தனர். அதற்கான ஆயுதமாக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த எண்ணினர்.
அத்துடன் இந்த சட்டத்தை பற்றி அதிகமான கிராம மக்களை அறிவூட்டுவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு
தீர்வு காண முடியும் என்பதை அறிந்துகொண்டதால் தகவல் அறிவதற்கான சட்டத்திற்கு அவர்கள்
நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் நல்லாட்சி
மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID)
இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் (SDGAP) தகவல்
அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டதாகும்.